Thursday, March 25, 2010

வெண்ணைத்தாழி, செட்டி அலங்காரம், வெட்டுக்குதிரை



வெண்ணைத்தாழி

பங்குனி திருவிழாவின் பதினாறாம் நாளன்று (21.03.2010) வெண்ணைத்தாழி உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தவழ்ந்த கோலத்தில் சுவாமி வெண்ணெய்ப்பானையுடன் வீதி உலா சென்றார். பொதுவாகவே எல்லா வருடமும் வெண்ணைத்தாழியன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்த முறை வெண்ணைத்தாழி உற்சவம் ஞாயிற்றுகிழமை அன்று அமைந்ததால் பக்தர்கள் கூட்டம் ஊரெங்கும் நிரம்பி வழிந்தது.



கோவிலை சுற்றி அமைந்துள்ள நான்கு வீதிகளில் வலம் வந்த பின்னர் பெரியகடைத்தெரு வழியாக வெண்ணைத்தாழி மண்டபத்தை வந்தடைந்தார் பெருமாள். வழிநெடுகிலும் பக்தர்கள் சுவாமி மீது வெண்ணெயை வீசி மகிழ்ந்தனர்.





கேரள கலைஞர்களின் பஞ்சரி மேள வைபவம் அற்புதமாக இருந்தது. கோவிலுக்குள் கலைஞர்களை சுற்றி நின்ற மக்கள் அவர்களின் வாசிப்பை வெகுவாக ரசித்தனர்.




செட்டி அலங்காரம்

பிற்பகல் நான்கு மணியளவில் வெண்ணைத்தாழி மண்டபத்தில் செட்டி அலங்காரத்தில் வலது கையில் தராசுடன் பெருமாள் காட்சி அளித்தார்.



வெட்டுக்குதிரை

அன்று இரவு தங்க குதிரை வாகனத்தில் மூன்று முறை செட்டித்தெருவில் வலம் வந்தபின் சுவாமி சன்னதி திரும்பினார். வெட்டுக்குதிரையை காண செட்டித்தெருவில் பெருந்திரளாக மக்கள் திரண்டிருந்தனர்.



7 comments:

சசிகுமார் on March 26, 2010 at 2:06 PM said...

உங்களுக்கு இறை பக்தி அதிகம் என்று நினைக்கிறேன். உங்களுடைய நேரத்தை செலவு செய்து இவ்வளவு VIEDOS, PHOTOS போன்றவைகளை போட்டு உள்ளீர்கள். சிறக்கட்டும் உங்கள் இறை தொண்டு.

மன்னார்குடி on March 26, 2010 at 2:20 PM said...

@சசிகுமார்

இறைபக்தி அதிகம் என்று சொல்வதை விட ஊர்பக்தி ஓரளவு உண்டு. வெகு நாட்களுக்கு பிறகு இப்பொழுது தான் நான் திருவிழா பார்க்க வந்தேன். நம்மள போல அரிதா திருவிழா பாக்க வர்றவங்களுக்கும் நேர்ல பாக்க முடியாதவங்களுக்கும் தான் இந்த படங்கள் மற்றும் காட்சிகள்.

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள் சசி.

ப.கந்தசாமி on March 28, 2010 at 12:15 PM said...

போட்டோக்கள் மிக நேர்த்தியாக உள்ளன. விடியோ காட்சிகள் தத்ரூபமாக இருக்கின்றன. கேரள செண்டை வாத்திய விடியோ நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.

மன்னார்குடி on March 28, 2010 at 2:19 PM said...

@Dr.P.Kandaswamy

தங்களின் வருகைக்கும் ஊக்கமளிக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி ஐயா.

Cho Visiri said...

I pray to Senkamala Nachiyar and SriDevi and Bhoodevi sameda Sri Lord Rajagopalaswamy to grant you Poorna Ayush and strength to post Photos and Video Motion Picture of the said Deities for 100 more years, for the benefit of "Gopala's Bhaktas in general and native-bhaktas of Mannargudi in particular.

I bow my head in respect to you, sir, madam.

மன்னார்குடி on May 25, 2010 at 10:11 PM said...

@Cho Visiri

Thanks a lot for your kind words and wishes.

GSKKSK on December 8, 2020 at 4:34 PM said...

ஆஹா..ப்ரமாதம்

Post a Comment

 

மன்னார்குடி மதிலழகு Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template In collaboration with fifa
Cake Illustration Copyrighted to Clarice