Thursday, November 20, 2014

மன்னார்குடி - ஆன்ட்ராய்ட் மென்பொருள்


மன்னார்குடி மற்றும் காவிரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள இருபது பகுதிகளைப் பற்றிய இலவச ஆன்ட்ராய்ட் மென்பொருள் "MANNARGUDI" என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
வரைபடக் குறியீடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளை இங்கே
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Continue reading...

Friday, May 14, 2010

ஹரித்ராநதி


கோவில் பாதி குளம் பாதி என்றழைக்கப்படும் மன்னார்குடியில் தான் இந்தியாவின் மிகப்பெரிய தெப்பக்குளமான ஹரித்ராநதி அமைந்துள்ளது. 1158 அடி நீளமும், 847 அடி அகலமும், 22.516 ஏக்கர் பரப்பளவும் கொண்ட இக்குளம் மன்னார்குடியின் பெருமைகளில் ஒன்றாகும்.

மன்னார்குடியில் அமைந்துள்ள பத்து புண்ணிய நீர்நிலைகளில் ஹரித்ராநதியும் ஒன்று. கோபியருடன் கோபாலன் ஜலக்கிரீடை செய்தருளியபோது,​​ கோபியர் உடலில் பூசியிருந்த மஞ்சள் (ஹரித்ரா)​ இக்குளத்தில் கலந்ததால் ஹரித்ராநதி என்ற பெயரைப் பெற்றது. காவிரியின் மகள் எனவும்,​​ 66 கோடி புண்ணிய தீர்த்தங்கள் ஒன்றிணைந்தது எனவும் ஹரித்ராநதியை கூறுவர்.

வருடந்தோறும் ஆனி மாதம் பத்து நாட்கள் இங்கு தான் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. பத்தாம் நாளான பௌர்ணமியன்று தெப்பம் நடைபெறுகிறது. குளத்தின் நடுவே வேணுகோபாலன் சன்னதி அமைந்துள்ளது.

ஹரித்ராநதி - Wikimapia Link

ஹரித்ராநதி - Picasa Album

திருவிழா கடைகள்

வெகு காலமாகவே மன்னார்குடியின் ஹரித்ராநதி பெரியதா அல்லது திருவாரூரின் கமலாலயம் பெரியதா என்ற ஒரு சந்தேகம் இவ்வூர் மக்களிடையே இருந்து வருகிறது. நிச்சயமாக ஹரித்ராநதி தான் கமலாலயத்தை விட பெரிய குளம். இதற்கான சான்றை விக்கிமேப்பியா (wikimapia.org) தளத்தில் உள்ள Distance Measure உதவியுடன் அறிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-களை கிளிக் செய்து பார்க்கவும்.


ஹரித்ராநதி - Wikimapia Distance Measure Link

கமலாலயம் - Wikimapia Distance Measure Link

Continue reading...

Thursday, April 15, 2010

குஞ்சான் கடை பக்கோடா


மன்னார்குடி பெரியக்கடைத்தெருவில் இருக்கும் குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை பல ஆண்டுகளுக்கு முன்னாள் துவக்கப்பட்டு இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் ஸ்பெஷல் என்றால் அது பக்கோடா தான். முதல் கடிக்கு மொறுமொறுப்பு, அடுத்த கடிக்குப் பதம், மூன்றாம் கடிக்கு கரையும் என்று வர்ணிக்கப்படும் குஞ்சான் கடை பக்கோடா பற்றி சமஸ் அவர்கள் தனது சாப்பாட்டுப் புராணம் புத்தகத்தில் எழுதியவற்றை பாஸ்டன் பாலா அவர்கள் தனது வலைப்பூவில் வெளியிட்டுள்ளார். அதன் லிங்க் இதோ:

SG Kittappa & Kunjaan Kadai Pakoda – Taste of the native land


தினமணி இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றும் சமஸ் அவர்கள் எழுதியுள்ள புத்தகம் சாப்பாட்டுப் புராணம். மன்னார்குடியை பூர்வீகமாகக்கொண்ட சமஸ் அவர்கள் வெவ்வேறு ஊர்களின் சிறப்பான உணவு வகைகளைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். இப்புத்தகத்தில் மன்னர்குடியின் சிறப்புகளாக டெல்லி ஸ்வீட்ஸ் அல்வா, குஞ்சான் கடை பக்கோடா, அன்வர் கடை மிலிட்டரி பரோட்டா, மன்னார்குடி 'உடுப்பி கிருஷ்ண பவன்' ரவா தோசை கடப்பா மற்றும் நேதாஜி ஸ்டால் டீ பற்றி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு:

சாப்பாட்டுப் புராணம்
சமஸ் அவர்களின் வலைப்பூ
சாப்பாட்டுப் புராணம் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பதிவு

தான் பிரசுரம் : சமஸ் : +91-9442707988
Continue reading...

Tuesday, March 30, 2010

மன்னார்குடி அல்வா?!


அல்வா என்றாலே திருநெல்வேலி தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், மன்னார்குடிக்கும் அல்வாவோடு ஒரு தொடர்பு உண்டு என்பதை சமஸ் அவர்கள் எழுதியுள்ள சாப்பாட்டுப் புராணம் புத்தகத்தின் மூலம் அறிந்தேன். நானும் டெல்லி ஸ்வீட்ஸ் அல்வாவை பலமுறை சுவைத்துள்ளேன். ஆனால் அதற்கு பின்னால் இப்படி ஒரு பின்னணி இருக்கிறதென்பதை இப்புத்தகத்தின் மூலமே அறிந்துகொண்டேன்.

டெல்லி ஸ்வீட்ஸ் அல்வா பற்றி சமஸ் அவர்கள் எழுதியவற்றை பாஸ்டன் பாலா அவர்கள் தனது வலைப்பூவில் வெளியிட்டுள்ளார். அதன் லிங்க் இதோ:


Mannargudi Halwa - Culinary Specialty

மன்னார்குடியில் பலகாரக்கடைகள் பெருகிவிட்டாலும் இன்றளவும் பழைய வாடிக்கையாளர்களை டெல்லி ஸ்வீட்ஸ் தக்கவைத்துக்கொண்டுள்ளது. அல்வாவைத்தவிர டெல்லி ஸ்வீட்ஸில் ஜாங்கிரியும் கடலைப்பக்கோடாவும் ஸ்பெஷல்.
Continue reading...

Friday, March 26, 2010

திருத்தேர்


பங்குனி திருவிழாவின் பதினேழாம் நாளன்று (22.03.2010) ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருத்தேரில் வலம் வந்தார். மிக பிரம்மாண்டமான திருத்தேரை பொதுமக்கள் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உதவியுடன் இழுத்தனர். 'லீவ் விடு லீவ் விடு, நாளைக்கு லீவ் விடு' போன்று பலவாறாக கூச்சலிட்டபடி ரசித்து மகிழ்ந்து தேரை இழுத்தனர் தேசிய மேல்நிலைப்பள்ளி சிறார்கள். அதனைக்கண்டு ஆசிரியர்களும் ரசித்து மகிழ்ந்தனர். இதனைக்கண்ட பலபேருக்கு தங்களது சிறுவயது ஞாபகங்கள் நிச்சியமாக வந்திருக்கும். மெல்ல ஆடி அசைந்தபடி திருத்தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்ததை காண கண் கோடி வேண்டும்.





பதினெட்டாம் நாள் பூப்பந்தலுடன் பங்குனி திருவிழா இனிதே நிறைவுற்றது.

Continue reading...
 

மன்னார்குடி மதிலழகு Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template In collaboration with fifa
Cake Illustration Copyrighted to Clarice