கோவில் பாதி குளம் பாதி என்றழைக்கப்படும் மன்னார்குடியில் தான் இந்தியாவின் மிகப்பெரிய தெப்பக்குளமான ஹரித்ராநதி அமைந்துள்ளது. 1158 அடி நீளமும், 847 அடி அகலமும், 22.516 ஏக்கர் பரப்பளவும் கொண்ட இக்குளம் மன்னார்குடியின் பெருமைகளில் ஒன்றாகும்.
மன்னார்குடியில் அமைந்துள்ள பத்து புண்ணிய நீர்நிலைகளில் ஹரித்ராநதியும் ஒன்று. கோபியருடன் கோபாலன் ஜலக்கிரீடை செய்தருளியபோது, கோபியர் உடலில் பூசியிருந்த மஞ்சள் (ஹரித்ரா) இக்குளத்தில் கலந்ததால் ஹரித்ராநதி என்ற பெயரைப் பெற்றது. காவிரியின் மகள் எனவும், 66 கோடி புண்ணிய தீர்த்தங்கள் ஒன்றிணைந்தது எனவும் ஹரித்ராநதியை கூறுவர்.
வருடந்தோறும் ஆனி மாதம் பத்து நாட்கள் இங்கு தான் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. பத்தாம் நாளான பௌர்ணமியன்று தெப்பம் நடைபெறுகிறது. குளத்தின் நடுவே வேணுகோபாலன் சன்னதி அமைந்துள்ளது.
ஹரித்ராநதி - Wikimapia Link
ஹரித்ராநதி - Picasa Album
திருவிழா கடைகள்
வெகு காலமாகவே மன்னார்குடியின் ஹரித்ராநதி பெரியதா அல்லது திருவாரூரின் கமலாலயம் பெரியதா என்ற ஒரு சந்தேகம் இவ்வூர் மக்களிடையே இருந்து வருகிறது. நிச்சயமாக ஹரித்ராநதி தான் கமலாலயத்தை விட பெரிய குளம். இதற்கான சான்றை விக்கிமேப்பியா (wikimapia.org) தளத்தில் உள்ள Distance Measure உதவியுடன் அறிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-களை கிளிக் செய்து பார்க்கவும்.
ஹரித்ராநதி - Wikimapia Distance Measure Link
கமலாலயம் - Wikimapia Distance Measure Link
Continue reading...