Thursday, February 26, 2009

மன்னார்குடி


மன்னார்குடி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது அதன் அமைதியும் அழகும் தான். வைஷ்ணவ திருக்கோவில்களில் மிக முக்கியமான ஒன்றான ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோவில் இங்கு தான் அமைந்துள்ளது. பதினெட்டு நாட்கள் நடைபெறும் பங்குனி திருவிழா மன்னர்குடியின் முக்கியமான சிறப்புகளில் ஒன்றாகும்.

கோவில்களும் குளங்களும் நிறைந்திருக்கும் மன்னார்குடியை போற்றும் வகையில் "கோவில் பாதி குளம் பாதி" என்றொரு பழமொழியும் உண்டு. "மன்னார்குடி மதிலழகு" என்றும் போற்றுவர்.

மன்னார்குடிக்கு மன்னை, ராஜமன்னர்குடி, சென்பகாரன்யம், தக்ஷின த்வாரகா, மன்னார்கோவில், வாசுதேவபுரி போன்ற பல பெயர்கள் உண்டு.

2 comments:

கிஷோர் on April 5, 2010 at 4:26 PM said...

அட்டகாசமான தொகுப்புகள். நன்றிகளுடன் வாழ்த்துக்கள் நண்பரே

மன்னார்குடி on April 5, 2010 at 4:53 PM said...

@கிஷோர்

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி கிஷோர்.

Post a Comment

 

மன்னார்குடி மதிலழகு Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template In collaboration with fifa
Cake Illustration Copyrighted to Clarice