Friday, May 14, 2010

ஹரித்ராநதி


கோவில் பாதி குளம் பாதி என்றழைக்கப்படும் மன்னார்குடியில் தான் இந்தியாவின் மிகப்பெரிய தெப்பக்குளமான ஹரித்ராநதி அமைந்துள்ளது. 1158 அடி நீளமும், 847 அடி அகலமும், 22.516 ஏக்கர் பரப்பளவும் கொண்ட இக்குளம் மன்னார்குடியின் பெருமைகளில் ஒன்றாகும்.

மன்னார்குடியில் அமைந்துள்ள பத்து புண்ணிய நீர்நிலைகளில் ஹரித்ராநதியும் ஒன்று. கோபியருடன் கோபாலன் ஜலக்கிரீடை செய்தருளியபோது,​​ கோபியர் உடலில் பூசியிருந்த மஞ்சள் (ஹரித்ரா)​ இக்குளத்தில் கலந்ததால் ஹரித்ராநதி என்ற பெயரைப் பெற்றது. காவிரியின் மகள் எனவும்,​​ 66 கோடி புண்ணிய தீர்த்தங்கள் ஒன்றிணைந்தது எனவும் ஹரித்ராநதியை கூறுவர்.

வருடந்தோறும் ஆனி மாதம் பத்து நாட்கள் இங்கு தான் தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. பத்தாம் நாளான பௌர்ணமியன்று தெப்பம் நடைபெறுகிறது. குளத்தின் நடுவே வேணுகோபாலன் சன்னதி அமைந்துள்ளது.

ஹரித்ராநதி - Wikimapia Link

ஹரித்ராநதி - Picasa Album

திருவிழா கடைகள்

வெகு காலமாகவே மன்னார்குடியின் ஹரித்ராநதி பெரியதா அல்லது திருவாரூரின் கமலாலயம் பெரியதா என்ற ஒரு சந்தேகம் இவ்வூர் மக்களிடையே இருந்து வருகிறது. நிச்சயமாக ஹரித்ராநதி தான் கமலாலயத்தை விட பெரிய குளம். இதற்கான சான்றை விக்கிமேப்பியா (wikimapia.org) தளத்தில் உள்ள Distance Measure உதவியுடன் அறிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-களை கிளிக் செய்து பார்க்கவும்.


ஹரித்ராநதி - Wikimapia Distance Measure Link

கமலாலயம் - Wikimapia Distance Measure Link

29 comments:

Madhavan Srinivasagopalan on May 14, 2010 at 11:32 AM said...

waav.. fantastic.. having bath in this tank is always fascinating.

Madhavan Srinivasagopalan on May 14, 2010 at 11:35 AM said...
This comment has been removed by the author.
தமிழ் அமுதன் on May 14, 2010 at 1:08 PM said...

மிக்க நன்றி.! நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது ..! மன்னார் குடி தெப்ப குளத்தைவிட திருவாரூர் குளம்தான் பெரிது என சிலர் வாதம் செய்து உள்ளனர் ஆனால் என் கண்ணுக்கு மன்னை தெப்ப குளமே பெரிதாய் பட்டது ..! இப்போது தெளிவானது ..நன்றி...

Santhappanசாந்தப்பன் on May 14, 2010 at 2:14 PM said...

நல்ல பதிவு..

நிச்சயமாக 22 ஏக்கர் தானா? இன்னும் அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

கமலாலயம் (திருவாரூர் குளம்) 25 ஏக்கர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..

நிழற்படங்கள் அருமை!!

மன்னார்குடி on May 14, 2010 at 3:48 PM said...

@Madhavan

நன்றி மாதவன்.

மன்னார்குடி on May 14, 2010 at 3:51 PM said...

@தமிழ் அமுதன் (ஜீவன்)

நானும் சமீபத்தில் தான் இந்த விஷயத்தை தெரிந்து கொண்டேன். நன்றி ஜீவன்.

மன்னார்குடி on May 14, 2010 at 3:57 PM said...

@பிள்ளையாண்டான்

நன்றி பிள்ளையாண்டான். நிச்சயமாக 22.516 ஏக்கர் தான். ஹரித்ராநதி தான் பெரிது என்பதை விளக்கும் வகையில் பதிவை அப்டேட் செய்துள்ளேன். படித்துவிட்டு சொல்லுங்கள்.

Madhavan Srinivasagopalan on May 14, 2010 at 5:13 PM said...

http://wikimapia.org/#lat=10.6746676&lon=79.4426483&z=18&l=0&m=b&search=mannargudi
From this scaled map, the length and breath of Haradranadhi (Mannargudi) is 365 x 270 m = 98550 sq-m = 24.3 acre (approximately).

From, http://wikimapia.org/#lat=10.7756596&lon=79.6304244&z=18&l=0&m=b&search=tiruvarur%2C%20temple
tiruvavar 'Kamalaalayam' is 340 x 245 m = 83300 sq-m = 20.5 acre. (approximately).

Hence it has been approximately shown that Mannai 'Haridranadhi tank' is larger than Tiruvarur 'Kamalaalayam tank'.

மன்னார்குடி on May 14, 2010 at 9:00 PM said...

@Madhavan

Thanks Madhavan.

chandru2110 on May 14, 2010 at 10:01 PM said...

பார்க்க அழகு நம்ம தெப்ப குளம்தான் . வேற குளத்தை நான் பார்த்ததில்லை. அழகோ அழகு.

மனோ சாமிநாதன் on May 15, 2010 at 12:37 AM said...

ஹரித்ரா நதியைப் பற்றி படித்ததும் மறுபடியும் மலரும் நினைவுகள்!

மேற்குக்கரையில்தான் எங்கள் வீடு. மாடியில் நின்று கொண்டு விடிய விடிய தெப்பம் பார்த்த நாட்கள், குளத்தில் நீச்சல் கற்றுக்கொண்டது, நான்கு கரைகளையும் அடிக்கடி தோழியருடன் சுற்றி வந்தது, இரவு நேரங்களில் பெளர்ணமி நிலவில் குளக்கரையின் அமைதியை ரசித்தது- எத்தனையோ வருடங்கள் காலச்சுழற்சியில் பறந்து கொண்டேபோனாலும்
இளமைப்பருவத்தின் சந்தோஷங்களை உங்கள் பதிவு ஒரு நொடியில் திரும்பக் கொண்டு வந்து விட்டது!!

RVS on May 15, 2010 at 10:34 AM said...

என்னுடைய "ஆனா ஆவன்னா" காலத்தில் இருந்து கல்லூரி காலம் வரை ஹரித்ரநதியின் கீழ்கரையில் இருக்கும் பாக்கியம் பெற்றவன் நான். காலையில் எழுந்தவுடன் வீட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு நடுவலாங்கோயிலை பார்த்துக்கொண்டே காப்பியை ருசிப்பது எந்த உலகத்திலும் கிடைக்காத பேரின்பம். பின்னால் பாமனியாறு முன்னால் ஒரு பெரிய குளமாகிய நதி , ஹரித்ராநதி என்று 23 வருடங்கள் இந்த பேறு கிடைக்கப் பெற்றவன் நான். குளத்தின் மதில்களை இருக்கும் பிறைகளில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம். இரவில் இயற்கை ஒளியில் மின்னும் அந்த திருக்கார்த்திகை குளத்தை யாரேனும் படம் பிடித்தால் அதி அற்புதமாக இருக்கும். பௌர்ணமி தினங்களில் நண்பர்களுடன் அந்த வடக்கு கரை மதில் கட்டையில் அமர்ந்து விடிய விடிய பேசியது, சிரித்தது, மறுநாள் கிரிக்கெட் போட்டிக்கு வியூகம் வகுத்தது, வருவோர் போவோரை கிண்டல் அடித்தது, பொங்கல் தினங்களில் உட்காரும் இடம் தவிர அனைத்து இடங்களிலும் கரும்பு கடித்து சக்கை துப்பியது, தீபாவளி கொண்டாட்டங்களில் வெங்காய வெடி வெடித்தது, போன்ற எண்ணிலடங்கா நிகழ்ச்சிகள் இன்னும் நெஞ்சில் இனிக்கிறது. ஏதேதோ பல நினைவலைகள் வந்து மனதில் முட்டுகிறது. "மன்னார்குடி டேஸ்" என்று தொடர் பதிவாக எழுத விருப்பம், நண்பர்கள் விருப்பப்பட்டால்....

நன்றி மன்னார்குடி.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

மன்னார்குடி on May 15, 2010 at 7:15 PM said...

@chandru2110

உண்மை தான் சந்துரு.

மன்னார்குடி on May 15, 2010 at 7:24 PM said...

@மனோ சாமிநாதன்

தங்களின் இளமைப்பருவத்தின் சந்தோஷங்களை இங்கு பகிர்ந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியைத்தருகிறது. நன்றி மனோ சாமிநாதன்.

மன்னார்குடி on May 15, 2010 at 7:29 PM said...

@RVS

அருமையா சொல்லியிருக்கீங்க ஆர்.வி.எஸ். இருபது வருடங்கள் பின்னோக்கி அழைத்து சென்றுவிட்டீர்கள். தங்களின் "மன்னார்குடி டேஸ்" தொடர்பதிவுக்காக காத்திருக்கிறேன். நன்றி.

Santhappanசாந்தப்பன் on May 16, 2010 at 7:52 PM said...

@மன்னார்குடி
இணைப்புக்களை பகிர்ந்தத‌ர்க்கு மிக்க நன்றி!

கவி அழகன் on June 1, 2010 at 3:33 PM said...

நல்ல படைப்பு வாழ்த்துக்கள்

மன்னார்குடி on June 1, 2010 at 4:05 PM said...

@யாதவன்

நன்றி யாதவன்.

தம்பி.... on June 17, 2010 at 12:22 PM said...

என்னப்பா மன்னார்குடி,
முன்னாடி எல்லாம் தெப்பகுளம் தண்ணி இளநி தண்ணி மாதிரி தெளிவா இருக்கும், இப்ப பாசி புடிச்சிபோய், கெட்ட வாடை அடிக்கிது, மீன் வளர்க்கிறேன்னு தண்ணிய நாற அடிட்சிட்டானுங்க, அத சுத்தம் பண்ண வழி ஏதும் இல்லையா ? அத பத்தி கொஞ்சம் சேர்ந்து யோசிப்போமா... ஏதாவது பன்னனும்பா.....

மன்னார்குடி on June 23, 2010 at 12:27 PM said...

ஆமாம் தம்பி.. முன்னாடி மாதிரி இப்போ இல்ல தான்.. சீக்கிரமா நடவடிக்கை எடுத்தா நல்லது..

Sweatha Sanjana said...

I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Unknown on September 21, 2010 at 5:37 PM said...

அருமையா சொல்லியிருக்கீங்க..வாழ்த்துக்கள்.
என்னுடைய அம்மா ஊரும், நான் பிறந்த ஊரும் மன்னார்குடிதான்.உங்கள் வலைத்தளத்திற்கு இதுதான் என் முதல் வருகை. உங்க வலைத்தளப் பெயரைப் பார்த்தவுடனே பிடிச்சிடுச்சு.அப்புறம் அந்த ஊரைப் பத்தி வேற எழுதி இருக்கீங்க.கேட்கனுமா??

மன்னார்குடி on September 22, 2010 at 4:24 PM said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜிஜி.

தமிழ் ஜோக்ஸ் ARR on September 25, 2010 at 12:35 PM said...

நன்றி நண்பரே..!

தெப்பக்குளத்தின் வடக்குக்கரையில் எங்கள் இல்லம்.. நான்கு கரைகளிலும் சிறந்தது எங்கள் வீதிதான்.. தென்றல் எப்போதும் தாலாட்டிக்கொண்டிருக்கும்.. காலையில் கண்விழிக்கும்போது கோபாலனின் கோபுரதரிசனம் கண்களைக் குளிரவைக்கும்.. மற்ற கரையினருக்குக் கிட்டாத பேறு இது..

மன்னையைப்பற்றி அதிகம் அறியவைத்த உங்களுக்கு நன்றிகலந்த வணக்கங்கள்..

~ ஏ.ஆர்.ஆர். சீவல் ராஜா.

மன்னார்குடி on September 25, 2010 at 5:14 PM said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சீவல் ராஜா.

புவனேஸ்வரி ராமநாதன் on March 21, 2011 at 9:35 AM said...

இதைவிடச் சிறப்பாக ஹரித்ரா நதியைப் பற்றி
ஆராய்ந்து சொல்ல இயலாது. தங்களது பணி
சிறப்பான பணி. தொடர வாழ்த்துக்கள். நன்றி.

Unknown on October 23, 2013 at 5:38 AM said...

இந்த சிறப்புமிக்க குளத்தை மாசுபடுத்துவதை தடுத்தால் சிறப்பாக இருக்கும்

p.selvaraj on January 17, 2014 at 9:34 PM said...

சிறு வயதில் என் தந்தையின் தோளில் அமர்ந்து போகும் இரவு நேரத்தில் இந்த நதியி நீருக்குள் ஆடும் சலை விளக்கின் பிம்பங்களைப் போலவே என் மனதிலும் நினைவலைகள் ஆடிக் கொண்டிருக்கின்றன. 1966ல் முதல் வகுப்பு தொடங்கி 1974ல் 8வது வரை சின்ன கான்வென்டிலும் 1974ல்9வதிலிருந்து 1976ல் 11வது வரை தேசிய உயர்னிலைப்பள்ளியிலும் பாடம் பயின்ற காலங்களில் தினமும் இரண்டு முறை இந்த புண்ணிய தீர்த்தத்தை வலம் வரும் பாக்கியம் பெற்றேன். புத்தக மூட்டையை முதிகில் சுமந்து குளத்தின் உல் பிரஹார இரண்டு அடி அகல பாதையில் ஓடியடியதை இப்போது நினைத்தால் மெய் சிலிர்க்கிறது. 1976ல் படிப்புக்கு வெளியிலும் அதன் பிறகு வேலை நிமித்தமாக வெளியூரிலும் வசித்தமையால் மன்னைக்கு நான் வருவது விருந்தாளி போலவே ஆகிவிட்டது. இருப்பினும் தூகத்தின் நடுவே இந்த அழகிய நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் என் கனவில் வந்து நினைவூட்டுகிறது. கண்ணுள்ள வரை இந்த கனவும் இருக்கும், நான் பிறந்து வளர்ந்த இந்த மண்ணின் வாசமும் என் மனதில் இருக்கும்,

p.selvaraj on January 17, 2014 at 9:38 PM said...

சிறு வயதில் என் தந்தையின் தோளில் அமர்ந்து போகும் இரவு நேரத்தில் இந்த நதியிந் நீருக்குள் ஆடும் சாலை விளக்கின் பிம்பங்களைப் போலவே என் மனதிலும் நினைவலைகள் ஆடிக் கொண்டிருக்கின்றன. 1966ல் முதல் வகுப்பு தொடங்கி 1974ல் 8வது வரை சின்ன கான்வென்டிலும் 1974ல்9வதிலிருந்து 1976ல் 11வது வரை தேசிய உயர்னிலைப்பள்ளியிலும் பாடம் பயின்ற காலங்களில் தினமும் இரண்டு முறை இந்த புண்ணிய தீர்த்தத்தை வலம் வரும் பாக்கியம் பெற்றேன். புத்தக மூட்டையை முதுகில் சுமந்து குளத்தின் உள் பிரஹார இரண்டு அடி அகல பாதையில் ஓடியடியதை இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்க்கிறது. 1976லிருந்து படிப்புக்காகவும் அதன் பிறகு வேலை நிமித்தமாகவும் வெளியூரில் வசிக்க நேரிட்டமையால் மன்னைக்கு நான் வருவது விருந்தாளி போலவே ஆகிவிட்டது. இருப்பினும் தூக்கத்தின் நடுவே இந்த அழகிய நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் என் கனவில் வந்து நினைவூட்டுகிறது. கண்ணுள்ள வரை இந்த கனவும் இருக்கும், நான் பிறந்து வளர்ந்த இந்த மண்ணின் வாசமும் என் மனதில் இருக்கும்,

Post a Comment

 

மன்னார்குடி மதிலழகு Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template In collaboration with fifa
Cake Illustration Copyrighted to Clarice