Thursday, April 15, 2010

குஞ்சான் கடை பக்கோடா


மன்னார்குடி பெரியக்கடைத்தெருவில் இருக்கும் குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை பல ஆண்டுகளுக்கு முன்னாள் துவக்கப்பட்டு இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் ஸ்பெஷல் என்றால் அது பக்கோடா தான். முதல் கடிக்கு மொறுமொறுப்பு, அடுத்த கடிக்குப் பதம், மூன்றாம் கடிக்கு கரையும் என்று வர்ணிக்கப்படும் குஞ்சான் கடை பக்கோடா பற்றி சமஸ் அவர்கள் தனது சாப்பாட்டுப் புராணம் புத்தகத்தில் எழுதியவற்றை பாஸ்டன் பாலா அவர்கள் தனது வலைப்பூவில் வெளியிட்டுள்ளார். அதன் லிங்க் இதோ:

SG Kittappa & Kunjaan Kadai Pakoda – Taste of the native land


தினமணி இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றும் சமஸ் அவர்கள் எழுதியுள்ள புத்தகம் சாப்பாட்டுப் புராணம். மன்னார்குடியை பூர்வீகமாகக்கொண்ட சமஸ் அவர்கள் வெவ்வேறு ஊர்களின் சிறப்பான உணவு வகைகளைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். இப்புத்தகத்தில் மன்னர்குடியின் சிறப்புகளாக டெல்லி ஸ்வீட்ஸ் அல்வா, குஞ்சான் கடை பக்கோடா, அன்வர் கடை மிலிட்டரி பரோட்டா, மன்னார்குடி 'உடுப்பி கிருஷ்ண பவன்' ரவா தோசை கடப்பா மற்றும் நேதாஜி ஸ்டால் டீ பற்றி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு:

சாப்பாட்டுப் புராணம்
சமஸ் அவர்களின் வலைப்பூ
சாப்பாட்டுப் புராணம் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பதிவு

தான் பிரசுரம் : சமஸ் : +91-9442707988

37 comments:

பிள்ளையாண்டான் on April 15, 2010 at 2:57 PM said...

படிக்கும் போதே நாக்கில எச்சில் ஊறுது...

இந்த மாதிரி பதிவுல்லாம் போட்டு ஏன் எங்க வயித்தெரிச்சலை கொட்டிக்கீறிங்க?

ஒரு பாக்கெட் பார்சல் அனுப்பி வைங்க!‌

மன்னார்குடி on April 15, 2010 at 4:19 PM said...

@பிள்ளையாண்டான்

அனுப்பிட்டா போச்சி. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிள்ளையாண்டான்.

Mrs.Menagasathia on April 15, 2010 at 4:30 PM said...

ஐயோ படிக்கும் போதே பக்கோடா சாப்பிட ஆசையா இருக்கு,ம்ம்ம்ம் அதென்ன பிள்ளையாண்டானுக்கு மட்டும் பார்சல் எனக்கும் அனுப்பி வைங்க....

மன்னார்குடி on April 15, 2010 at 5:34 PM said...

@Mrs.Menagasathia

உங்களுக்கும் அனுப்பியாச்சுங்க :-)

Geetha Achal on April 15, 2010 at 5:50 PM said...

மிகவும் அருமையாக சொல்லி இருக்கின்றிங்க...பகோடாவினை என்ன தான் வீட்டில் செய்தாலும் அதனை கடையில் வாங்கி சாப்பிடும் பொழுது இருக்கும் சுவை ஏனோ வீட்டில் செய்யும் பொழுது வருவதில்லை...முதல் கடி...இரண்டாவது கடி...முன்றாவது கடி..என்று சொல்வதில் இருந்து அந்த பகோடோ எவ்வளவு சூப்பர்ப் என்று தெரிகின்றது...

மன்னார்குடி on April 15, 2010 at 6:09 PM said...

@Geetha Achal

நன்றிங்க. நீங்க சொல்ற மாதிரி கடை பக்கோடா தனி டேஸ்ட் தான்.

chandru2110 on April 15, 2010 at 11:42 PM said...

குஞ்சான் செட்டியார் கடையில பக்கோடா மட்டும் இல்லை எல்லாம் நல்லா இருக்கும்.

மன்னார்குடி on April 16, 2010 at 11:30 AM said...

@chandru2110

ஆமாம் சந்துரு.

Chitra on April 16, 2010 at 12:01 PM said...

அப்படியே அந்த பக்கோடா கொஞ்சம் பார்சல் பண்ணி அனுப்பிடுங்க. .... yummy!

மன்னார்குடி on April 16, 2010 at 12:17 PM said...

@Chitra

உங்களுக்குமா? அனுப்பிடுவோம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்ரீராம். on April 16, 2010 at 2:42 PM said...

மொறு மொறு பதிவுதான்...

மன்னார்குடி on April 16, 2010 at 3:03 PM said...

@ஸ்ரீராம்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

Malar Gandhi on April 16, 2010 at 8:59 PM said...

I am a big time foodie, like our ethnic food so much. Your blog displays the nativity, wonderful read...its a pleasure to bump into your site, I am gonna follow your regularly.:)

மன்னார்குடி on April 17, 2010 at 9:40 PM said...

@Malar Gandhi

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

மனோ சாமிநாதன் on April 18, 2010 at 12:55 AM said...

நீங்கள் குறிப்பிடும் பக்கோடாக்கடையின் விபரங்களைப் படித்த பின் சீக்கிரமே மன்னை வரவேண்டுமென்று ஆவலாக உள்ளது.

நிச்சயம் இந்த முறை ஊருக்கு [தஞ்சை] வரும்போது இந்தக் கடைகளையெல்லாம் பார்க்க, பக்கோடா, அல்வா இவைகளை சுவைக்க ஒரு தடவை மன்னை ட்ரிப் இருக்கிறது!

‘சாப்பாட்டுப் புராணம்’ புத்தகம் மன்னையில் எங்கு கிடைக்கும்?

மன்னார்குடி on April 18, 2010 at 6:45 PM said...

@மனோ சாமிநாதன்

மிக்க மகிழ்ச்சி. அவசியம் வாருங்கள்.

‘சாப்பாட்டுப் புராணம்’ புத்தகம் வாங்குவதற்கான விவரமறிய கீழ்க்கண்ட முகவரிக்கு செல்லவும்:

http://crea.in/contact.html

Ammu Madhu on April 19, 2010 at 8:05 PM said...

பக்கோடா கலக்கலா இருக்கும் போல..தெரிஞ்சவங்க யாரவது போன வாங்கிட்டு வர சொல்லிரவேண்டியதுதான்.

மன்னார்குடி on April 20, 2010 at 6:47 AM said...

@Ammu Madhu

வாங்கி சாப்பிட்டு பாருங்க. நல்லாயிருக்கும்.

ராம் on April 24, 2010 at 12:18 AM said...

ஹாய்,

கொஞ்சம் பிஸியாகிவிட்டேன் ... நானும் பதிவு போடல நண்பர்கள் வலைபூவையும் பார்க்கல.

குஞ்சான் கடை பக்கோடா நானும் சுவைத்துள்ளேன் ... பதிவிற்கு நன்றி

அப்புறம்... போட்டோல்லாம் நீங்களே போய் பிடித்தீர்களா ?

தம்பி.... on April 24, 2010 at 10:38 AM said...

நண்பா மன்னார்குடி, நண்பர் சமஸ் மெல்போர்ன் கிரிகெட் டீம்ல இருந்தவர் தானே? இவரு தாமரை எல்லாம் தெற்கு வீதி கிரிகெட் டீம்ல இருந்தவங்கன்னு நினைக்கிறேன், இவரோட நானும் கிரிகெட் ஆடி இருகேம்பா, இவர நாங்க சோமாஸ் ன்னு சொல்லுவோம், உங்களோட ப்ளாக் மூலமா நிறைய பழைய /மன்னார்குடியில் இருந்து வெளியே சென்று விட்ட நண்பர்களை ( RVSM,SOMAS ) பற்றி தெரிஞ்சிக்க முடியுதுப்பா..... நன்றி

தம்பி.... on April 24, 2010 at 10:44 AM said...

சாப்பாட்டுப் புராணம்’ இந்த புத்தகத்த படிச்சிட்டு என்னோட சீனியர் ( திருநெல்வேலி காரர் )குஞ்சான் செட்டியர் பக்கடா, டெல்லி ஸ்வீட் அல்வா எல்லாம் வாங்கிட்டு வர சொனார், போன தடவ லீவுக்கு வந்தப்ப வாங்கிட்டு வந்து குடுத்தேன்.

மன்னார்குடி on April 27, 2010 at 8:29 AM said...

@ராம்

நன்றி ராம். ஆமாம், போட்டோ நாங்கள் எடுத்தது தான்.

மன்னார்குடி on April 27, 2010 at 8:30 AM said...

@தம்பி....

நன்றி தம்பி....

சசிகுமார் on May 3, 2010 at 6:15 PM said...

நல்ல பதிவு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

மன்னார்குடி on May 3, 2010 at 11:16 PM said...

நன்றி சசி.

Madhavan on May 4, 2010 at 9:56 PM said...

presently i am on week tour to mannai. I remembered you (& ur post) when I was passing through the sweet stall mentioned.

btw. why no further posts since then..

மன்னார்குடி on May 5, 2010 at 10:56 AM said...

நன்றி மாதவன். ஒரு வாரம் ட்ரிப்பா? Enjoy. நம்ம ஊரு எப்படி இருக்கு? அடுத்த பதிவு மிக விரைவில்.

புவனேஸ்வரி ராமநாதன் on July 15, 2010 at 12:24 PM said...

உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் பணி மென்மேலும் சிறந்து
விளங்க எங்களது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!

மன்னார்குடி on July 15, 2010 at 12:27 PM said...

@புவனேஸ்வரி ராமநாதன்

மிக்க நன்றி.

சத்தி... on July 19, 2010 at 1:18 PM said...

நண்பரே ,,

மன்னார்குடி-க்கு என்று தனியாக ஒரு நல்ல வலைத்தளம் இல்லையே என்ற ஏக்கத்தை தீர்த்து விட்டிர்கள்.,

உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.,

மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

மன்னார்குடி on July 19, 2010 at 5:09 PM said...

@சத்தி...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

siva @ MELBOURNE said...

MISSIN MY FAVOURITE SNACK FOR THE PAST 124 DAYS AND COUNTING.....................................................

மன்னார்குடி on July 22, 2010 at 9:22 PM said...

@siva @ MELBOURNE

Thanks for your visit.

தமிழ் ஜோக்ஸ் ARR on September 25, 2010 at 6:08 PM said...

இப்போ முந்திபோல சுவை இல்லப்பா.. பழைய ஆளுகள் எல்லாம் 'போயிட்டாங்க்'.. இருக்கற ஆளுக கூலிக்கு மாவரைக்கிறாங்க..

அப்புறம், நீ பத்ரி தம்பி மாதவனா..? அப்படின்னா எங்க ஹெச் சி சி டீம்ல கெஸ்ட் ப்ளேயரா விளையாடி ஒரு சூப்பர் கேட்ச் எடுத்து ஜெயிக்க வச்சியே .. மறக்க முடியாது..

அந்த மாதவன் இல்லாட்டா, ஒருமை விளித்தலுக்குப் பொருத்தருள்க..

மன்னார்குடி on September 27, 2010 at 11:53 AM said...

நானும் கேள்விப்பட்டேன். நான் மாதவன் இல்லைங்க. நன்றி.

ஆர்.ராமமூர்த்தி on November 17, 2010 at 10:27 PM said...

பக்கோடா சூப்பர்!

Badri on November 6, 2015 at 1:20 PM said...

I belong to the 1971 batch of the famous NHS. I remember the taste of Kunchan chetti kadai pakkoda even now.

Post a Comment

 

மன்னார்குடி மதிலழகு Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template In collaboration with fifa
Cake Illustration Copyrighted to Clarice