Tuesday, March 30, 2010

மன்னார்குடி அல்வா?!


அல்வா என்றாலே திருநெல்வேலி தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், மன்னார்குடிக்கும் அல்வாவோடு ஒரு தொடர்பு உண்டு என்பதை சமஸ் அவர்கள் எழுதியுள்ள சாப்பாட்டுப் புராணம் புத்தகத்தின் மூலம் அறிந்தேன். நானும் டெல்லி ஸ்வீட்ஸ் அல்வாவை பலமுறை சுவைத்துள்ளேன். ஆனால் அதற்கு பின்னால் இப்படி ஒரு பின்னணி இருக்கிறதென்பதை இப்புத்தகத்தின் மூலமே அறிந்துகொண்டேன்.

டெல்லி ஸ்வீட்ஸ் அல்வா பற்றி சமஸ் அவர்கள் எழுதியவற்றை பாஸ்டன் பாலா அவர்கள் தனது வலைப்பூவில் வெளியிட்டுள்ளார். அதன் லிங்க் இதோ:


Mannargudi Halwa - Culinary Specialty

மன்னார்குடியில் பலகாரக்கடைகள் பெருகிவிட்டாலும் இன்றளவும் பழைய வாடிக்கையாளர்களை டெல்லி ஸ்வீட்ஸ் தக்கவைத்துக்கொண்டுள்ளது. அல்வாவைத்தவிர டெல்லி ஸ்வீட்ஸில் ஜாங்கிரியும் கடலைப்பக்கோடாவும் ஸ்பெஷல்.
Continue reading...

Friday, March 26, 2010

திருத்தேர்


பங்குனி திருவிழாவின் பதினேழாம் நாளன்று (22.03.2010) ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருத்தேரில் வலம் வந்தார். மிக பிரம்மாண்டமான திருத்தேரை பொதுமக்கள் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் உதவியுடன் இழுத்தனர். 'லீவ் விடு லீவ் விடு, நாளைக்கு லீவ் விடு' போன்று பலவாறாக கூச்சலிட்டபடி ரசித்து மகிழ்ந்து தேரை இழுத்தனர் தேசிய மேல்நிலைப்பள்ளி சிறார்கள். அதனைக்கண்டு ஆசிரியர்களும் ரசித்து மகிழ்ந்தனர். இதனைக்கண்ட பலபேருக்கு தங்களது சிறுவயது ஞாபகங்கள் நிச்சியமாக வந்திருக்கும். மெல்ல ஆடி அசைந்தபடி திருத்தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்ததை காண கண் கோடி வேண்டும்.





பதினெட்டாம் நாள் பூப்பந்தலுடன் பங்குனி திருவிழா இனிதே நிறைவுற்றது.

Continue reading...

Thursday, March 25, 2010

வெண்ணைத்தாழி, செட்டி அலங்காரம், வெட்டுக்குதிரை



வெண்ணைத்தாழி

பங்குனி திருவிழாவின் பதினாறாம் நாளன்று (21.03.2010) வெண்ணைத்தாழி உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தவழ்ந்த கோலத்தில் சுவாமி வெண்ணெய்ப்பானையுடன் வீதி உலா சென்றார். பொதுவாகவே எல்லா வருடமும் வெண்ணைத்தாழியன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்த முறை வெண்ணைத்தாழி உற்சவம் ஞாயிற்றுகிழமை அன்று அமைந்ததால் பக்தர்கள் கூட்டம் ஊரெங்கும் நிரம்பி வழிந்தது.



கோவிலை சுற்றி அமைந்துள்ள நான்கு வீதிகளில் வலம் வந்த பின்னர் பெரியகடைத்தெரு வழியாக வெண்ணைத்தாழி மண்டபத்தை வந்தடைந்தார் பெருமாள். வழிநெடுகிலும் பக்தர்கள் சுவாமி மீது வெண்ணெயை வீசி மகிழ்ந்தனர்.





கேரள கலைஞர்களின் பஞ்சரி மேள வைபவம் அற்புதமாக இருந்தது. கோவிலுக்குள் கலைஞர்களை சுற்றி நின்ற மக்கள் அவர்களின் வாசிப்பை வெகுவாக ரசித்தனர்.




செட்டி அலங்காரம்

பிற்பகல் நான்கு மணியளவில் வெண்ணைத்தாழி மண்டபத்தில் செட்டி அலங்காரத்தில் வலது கையில் தராசுடன் பெருமாள் காட்சி அளித்தார்.



வெட்டுக்குதிரை

அன்று இரவு தங்க குதிரை வாகனத்தில் மூன்று முறை செட்டித்தெருவில் வலம் வந்தபின் சுவாமி சன்னதி திரும்பினார். வெட்டுக்குதிரையை காண செட்டித்தெருவில் பெருந்திரளாக மக்கள் திரண்டிருந்தனர்.



Continue reading...

Tuesday, March 23, 2010

யானை வாகனம், கண்ணாடி சேவை, கோரதம்



யானை வாகனத்தில் பவனி - 19.03.2010



கண்ணாடி சேவை - 20.03.2010


கோரதத்தில் பவனி - 20.03.2010


Continue reading...

Friday, March 19, 2010

தங்க கருட வாகனம், ஆண்டாள் அலங்காரம்



தங்க கருட வாகனத்தில் பவனி - 17.03.2010



ஆண்டாள் அலங்காரம் - 18.03.2010

Continue reading...

Tuesday, March 16, 2010

பங்குனி திருவிழா 2010 - காட்சிகள்



கண்டபேரண்ட பக்ஷி வாகனத்தில் பவனி - 11.03.2010




ரிஷியமுக பர்வத வாகனத்தில் பவனி - 13.03.2010




தங்க சூர்யபிரபையில் பவனி - 15.03.2010




வெள்ளி சேஷ வாகனத்தில் பவனி - 16.03.2010


Continue reading...

Friday, March 12, 2010

ஸ்ரீ ராஜகோபாலசுவாமி திருக்கோவில் - பங்குனி திருவிழா 2010


கண்டபேரண்ட பக்ஷி வாகனத்தில் பவனி - 11.03.2010


புஷ்ப பல்லக்கில் பவனி - 12.03.2010


ரிஷியமுக பர்வத வாகனத்தில் பவனி - 13.03.2010


சிம்ம வாகனத்தில் பவனி - 14.03.2010


தங்க சூர்யபிரபையில் பவனி - 15.03.2010


வெள்ளி சேஷ வாகனத்தில் பவனி - 16.03.2010

Continue reading...
 

மன்னார்குடி மதிலழகு Copyright © 2009 Designed by Ipietoon Blogger Template In collaboration with fifa
Cake Illustration Copyrighted to Clarice